Monday, October 12, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் தொழில்நுட்பம் வணிகம் கல்வி & வேலை விளையாட்டு வாகனம் உலகம் குழந்தை வளர்ப்பு உடற்பயிற்சி BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

மழைக்காலத்தில் இந்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்த்திடுவது நல்லதாம்...

மழைக்காலத்தில் இந்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்த்திடுவது நல்லதாம்...

ஒவ்வொரு காலநிலையிலும் நமது உடல் ஒவ்வொரு விதமாக இருக்கும். வெயில் காலத்தில் அதிகமாக வியர்க்கும், மழைக்காலத்தில் அதிகமாக குளிரும். அத்தகயை நேரத்தில் உடலுக்கு ஒவ்வொரு விதமான உணவுகள் நிவாரணமாக இருக்கும். அதேபோல், சில உணவுகள் அத்தகயை காலக்கட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டியதாக இருக்கும். மழை காலத்தின் போது நமது உடலில் செரிமான அமைப்பு மிகவும் உணர்திறன் கொண்டதாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த காலநிலையில் லேசான மற்றும் வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிட மருத்துவர்கள் பெரும்பாலும் அறிவுறுத்துகிறார்கள். இந்த காலத்தில் நாம் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் உள்ளன. இவற்றைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

வறுத்த பொருட்கள்

மழைக்காலத்தில் எண்ணெய் பொரித்த உணவுகளை சாப்பிட அதிக ஆசை தோன்றுவது இயல்பு. குளிர்ச்சியான சூழலில் எண்ணெயில் பொரித்த சூடான உணவைச் சாப்பிட தோன்றக்கூடும். ஆனால், அதை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். இந்த பருவத்தில் செரிமான அமைப்பு மிகவும் மெதுவாக இயங்கும். இதன் காரணமாக பித்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெளி உணவுகளில் பல நேரங்களில் எண்ணெய் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே, எண்ணெய் வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்த்திடுவது நல்லது.

முடி வெடிப்பை சரி செய்ய இந்த எண்ணெயை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தி பாருங்கள்…

வெளி உணவுகள்

மழைக்காலத்தில் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக, அழுக்கு குவிந்து, அதில் ஈக்கள் வருவதற்கும் வழிவகுக்கிறது. இந்த நேரத்தில் வெளியில் விற்கும் உணவுகளைச் சாப்பிடும் போது சுகாதாரமும் குறைகிறது. இதன் காரணமாக, நோய்கள் வருவதற்கான ஆபத்தும் அதிகரிக்கிறது. எனவே, இந்த நேரத்தில் வெளி உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

தயிர்

மழைக்காலத்தில் பால் சம்பந்தப்பட்ட பொருட்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக தயிரைத் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், இந்த நேரத்தில், தயிரில் அதிக பாக்டீரியாக்கள் வளரும். இதனால் வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படலாம். அதுதவிர, இந்த காலத்தில் சளி, இருமல் தொல்லை உள்ளவர்களும் மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

உதட்டு வறட்சி முதல் பாத வெடிப்பு வரை அனைத்தையும் சரி செய்திட இந்த ஒரு பழம் போதும்…

இறைச்சிகள்

இந்த மழைக்காலத்தில் இறைச்சி சாப்பிடக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, இந்த நேரத்தில் நமது செரிமான அமைப்பு மிகவும் பலவீனமாக இருக்கும். இரண்டாவதாக, இந்த நேரத்தில் காய்ச்சல் அதிகமாக பரவக்கூடும் என்பதால், இறைச்சி சாப்பிடுவது பல நோய்களை ஏற்படுத்தக்கூடும். மூன்றாவதாக, மழைக்காலம் என்பது விலங்குகளின் இனப்பெருக்க காலமாகும். இந்த நேரத்தில் தண்ணீரும் அதிகமாக மாசுபடக்கூடும் என்பதால், பல நோய்களுக்கு ஆளாகக்கூடும்.

இலை காய்கறிகள்

இலை காய்கறிகளான கீரை வகைகள், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை மழைக்காலத்தில் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், இந்த பருவத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வேகமாக பரவக்கூடும். மேலும், இதனால் இலை காய்கறிகளில் பூச்சிகள் விரைவாக உருவாகி நோய்தொற்றுகள் வேகமாக பரவக்கூடும் என்பதால் அவற்றை மழைக்காலத்தில் சாப்பிடுவதைத் தவிர்த்திடுவது நன்மை பயக்கும்.

Share this article

R

Rajasekar

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

…

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

…

…

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,880
தங்கம் (24k)
1 கிராம்
₹14,574
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

அடுத்து வாசிக்க

செரிமானத்தை மேம்படுத்தும் நார்ச்சத்து: அன்றாட உணவில் சேர்க்க வேண்டியவை! வாசிக்க →